close
Choose your channels

அனுஷ்காவின் அதிபயங்கர வில்லன் இவர்தான்....

Monday, May 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அனுஷ்கா தற்போது 'பாகுபலி 2' படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் வில்லன் ராணா என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அனுஷ்கா நடித்து வரும் மற்றொரு பிரமாண்டமான படமான 'பாகமதி' படத்தின் வில்லன் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குனர் ஜி.அசோக் இயக்கி வரும் இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கவுள்ளார்.

மொட்டை தலையுடன் அடர்த்தியான மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் ஜெயராம் நடிக்கவுள்ளதாகவும் இந்த கேரக்டர் அவருடைய திரையுலக வாழ்வில் மறக்க முடியாத கேரக்டராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜெயராமின் புதிய கெட்டப்பின் புகைப்படம் அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.