close
Choose your channels

விஜய்யின் ‘புலி’ ரிலீஸ் தேதி தள்ளிப்போனது

Monday, August 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செப்டம்பர் 17 விநாயகர் சதுர்த்தியை இளையதளபதி விஜய்யின் புலி` படத்துடன் கொண்டாடக் காத்திருந்த ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களுக்கும் சற்று ஏமாற்றம் அளிக்கு செய்தி வந்துள்ளது.

சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த மெகா பட்ஜெட் ஃபேண்டசி திரைப்படத்தின் வெளியீடு இரண்டு வாரங்களுக்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

அக்டோபர் 1 அன்று திரையரங்குகளில் புலி` வெளியாகும் என்று படத்தைத் தயாரித்து எஸ்கேடி ஃபிலிம்ஸ் நிறுவனத்தினர் டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளனர்.

இந்தத் தாம்தம் சற்று ஏமாற்றம் அளித்தாலும் அக்டோபர் 1 வியாழன், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி ஞாயிறு என்று தொடர் விடுமுறைகள் வருவதால் படத்தின் ஓப்பனிங் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்ற நல்ல செய்தியும் இதில் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.