close
Choose your channels

பிகில் மூன்றாவது லுக்: தீப்பொறிகளுக்கு நடுவில் மைக்கேல்

Saturday, June 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட்லுக் நேற்று வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி இந்த படத்தின் மூன்றாவது லுக்கை வெளியிட்டுள்ளார்.

தீப்பொறிகள் பறக்க, ஒரு கூட்டம் விஜய்யை தாக்க வர, அவர்களை அசால்ட்டாக எதிர்நோக்கும் மைக்கேல் விஜய்யின் கையில் ஒரு சைக்கிள் செயின் இருப்பது போல் உள்ள இந்த மூன்றாவது லுக், ஒரு பக்கா ஆக்சன் காட்சியை குறிக்கும் வகையில் உள்ளது.

மைக்கேல் கேரக்டர் நிச்சயம் அனைவர் மனதையும் கவரும் என்றும், தளபதியின் ரசிகர்களுக்காக இந்த சிறப்பு போஸ்டர் என்றும் அர்ச்சனா கல்பாதி குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் டிரண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.