close
Choose your channels

விஜய் பட இயக்குனர் மாரடைப்பால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

Tuesday, December 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த படத்தை இயக்கிய இயக்குனர் திடீரென மாரடைப்பால் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தளபதி விஜய், ரிச்சா பலோட், விவேக் உள்பட பலர் நடித்த திரைப்படம் ’ஷாஜகான்’. கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தை ஆச்சார்யா ரவி என்பவர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ’என் சுவாச காற்றே’ ’தர்மசீலன்’, ’டம்மி பட்டாசு’, ‘விண்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் ஆச்சாரியா ரவி திடீரென இன்று மாரடைப்பால் காலமானார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.