close
Choose your channels

விஜய்சேதுபதி-காத்ரினா கைப் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Thursday, February 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது தமிழ் மட்டுமின்றி அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாலிவுட்டில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படத்தில் காத்ரீனா கைப் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படம் உறுதி செய்யப்பட்டதோடு டைட்டிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி மற்றும் காத்ரீனா கைப் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு ’மேரி கிறிஸ்மஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன ’அந்தாதூன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த படம் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும் பார்வையாளர்கள் சீட் நுனியில் இருக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் புனேவில் தொடங்க இருப்பதாகவும் விஜய் சேதுபதி, காத்ரீனா கைப் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.