close
Choose your channels

நாளை வெளியாகும் 'அனபெல் சேதுபதி' படத்தின் இரண்டு நிமிட ஸ்னீக்பீக் வீடியோ!

Thursday, September 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’துக்ளக் தர்பார்’ மற்றும் ’லாபம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த வாரம் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான ‘அனபெல் சேதுபதி’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. 

இந்த படம் நாளை ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் 2 நிமிட ஸ்னீக்பீக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் டாப்ஸி ஒரு அரண்மனையில் சென்று பார்வையிட்டு கொண்டிருக்கிறார். அப்போது அவர் பின்னாலேயே அரூபமாக ஜெகபதிபாபு செல்கிறார். அவர் உடன் வருவது டாப்ஸிக்கு தெரியவில்லை. கண்ணாடியில் கூட அவரது உருவம் தெரியவில்லை. அது மட்டுமின்றி கண்ணாடியில் வித்தியாசமாக இருப்பதை ஏன் டாப்ஸி உணர்கிறார். 

மேலும் அங்கு உள்ள ஒரு கலையை அவர் ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு பூர்வஜென்ம நினைவுகள் வருவது போன்ற காட்சிகள் இந்த இரண்டு நிமிட வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ இந்த படத்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, டாப்சி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் ஒளிப்பதிவில், கிருஷ்ண கிஷோர் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை நாளை பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.