close
Choose your channels

'நீ எந்த ரூல்ஸையும் ஃபாலோ பண்ற மாதிரி தெரியலையே... விஜய்சேதுபதியின் 'டிஎஸ்பி' டிரைலர்

Saturday, November 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடித்த ‘டிஎஸ்பி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களை வைரலாகி வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படம் ஆக்ஷன் மற்றும் காமெடி, ரொமான்ஸ் கலந்த ஒரு ஜனரஞ்சக படமாக உருவாகி இருக்கிறது என்பது இந்த படத்தின் டிரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

காவல்துறை அதிகாரி கேரக்டரில் மிடுக்காகவும் அதே நேரத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் பொருத்தமாகவும் இருக்கும் விஜய் சேதுபதி ஆக்ஷன் காட்சிகளிலும் அடித்து தூள் கிளப்புகிறார்.

பொன்ராம் இயக்கத்தில் உருவான இந்த படம் அதிரடி ஆக்ஷன் மற்றும் காமெடி காதல் என அவரது முந்தைய படங்களின் பாணியிலேயே இந்த படமும் அமைந்திருக்கிறது என்பதால் இந்த படமும் வெற்றி பெறுவது உறுதி எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி, அனுகீர்த்தி வாஸ், பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தம், தீபா, சிங்கம்புலி உள்பட பலர் நடிப்பில் உருவாகி இந்த படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். மொத்தத்தில் இந்த டிரைலரில் இருந்து ‘டிஎஸ்பி’ திரைப்படம் விஜய்சேதுபதிக்கு மற்றொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.