யோகிபாபுவுக்கு உதவிய விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Wednesday,January 02 2019]

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு தற்போது ஒருசில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு யோகிபாபு முன்னணி வேடத்தில் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஜோம்பி. இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகாவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

த்ரில் மற்றும் காமெடியுடன் கூடிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பகக்த்தில் வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் புவன் இயக்கவிருக்கும் 'ஜோம்பி' படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கவுள்ளார். 'ஜோம்பி'யை அடுத்து 'தர்மபிரபு', 'கூர்கா ஆகிய படங்களிலும் யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

முதல்வர் பழனிச்சாமியை திடீரென சந்தித்தது ஏன்? கருணாஸ் எம்.எல்.ஏ விளக்கம்

பிரபல நகைச்சுவை நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்

சன்னிலியோனுடன் 2வது முறையாக குத்தாட்டம் ஆடும் தமிழ் நடிகர்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் முதல்முறையாக 'வடகறி' என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த பாடலில் சன்னிலியோனுடன் ஜெய் நடனம் ஆடியிருந்தார்

'தளபதி 63' படத்தில் இணையும் 16 இளம்பெண்கள்

தளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 63' படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் சமீபத்தில் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் படக்குழுவினர் பிசியாக உள்ளனர்.

'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் விருந்து கொடுத்த 'விஸ்வாசம்' தயாரிப்பாளர்

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தல அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.