close
Choose your channels

'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல்

Wednesday, January 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முத்துராஜின் கலை இயக்கத்தில் உருவாகி வரும் செட் அமைக்கும் பணிகள் தாமதமானதால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் 2020ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.