close
Choose your channels

'தளபதி 63' படத்தில் இணையும் 16 இளம்பெண்கள்

Wednesday, January 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 63' படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் சமீபத்தில் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் படக்குழுவினர் பிசியாக உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படம் என்று ஏற்கனவே தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது இந்த படம் ஒரு பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட படம் என்றும், இந்த படத்தில் கால்பந்து வீராங்கனைகளாக நடிக்க 16 இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பெண்கள் கால்பந்து டீமின் பயிற்சியாளராக விஜய் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகவுள்ள 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.