close
Choose your channels

என்னுடைய 'அடாவடி அப்பா': விஜய்சேதுபதியின் சுவாரஸ்யமான வீடியோ

Monday, January 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஹலித் ஷமீம் இயக்கிய ‘ஏலே’ என்ற திரைப்படத்தின் புரமோஷன் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு அடாவடி அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் வீடியோவில் விஜய்சேதுபதி தன்னுடைய அப்பாவின் அடாவடி குறித்து சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது:

எனக்கும் என் அப்பாவுக்கும் இடையே நிறைய இனிமையான சண்டைகள் நடந்து உள்ளது. நான் இன்று சினிமாவில் இந்த அளவுக்கு இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் எங்க அப்பா வாழ்க்கையை நான் பார்த்ததால் தான் என்று நினைக்கிறேன்

எங்க அப்பா செய்த அடாவடித்தனத்தில் ஒன்று ஒரு முறை என்னுடைய அப்பாவுடன் குற்றாலம் சென்று திரும்பி கொண்டிருந்தபோது ரயிலில் மிகவும் கூட்டமாக இருந்தது. அப்போது இடையில் ஒருவர் ஏறி வழி முழுவதும் பிரச்சனை செய்து கொண்டே இருந்தார். அந்த ரயிலில் இருந்த மற்றவர்கள் அதை பொறுத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் எங்க அப்பா திடீரென எழுந்து வந்து அவருடைய முகத்தில் ஓங்கி ஒரு மிதி மிதித்து விட்டு திரும்ப போய் படுத்து விட்டார்

அந்த நபரோ என்னுடைய அப்பாவை திட்டிக் கொண்டேயிருந்தார். சென்னை வந்தவுடன் வெட்டுவேன் குத்துவேன் என்று கூறிக் கொண்டே இருந்தால் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஆனால் சென்னை வந்தபிறகு அந்த நபர் ஒரு பக்கமாகவும், நாங்கள் ஒரு பக்கமாகவும் சென்று விட்டோம். எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை

இதுகுறித்து நான் என்னுடைய அப்பாவுடன் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் பிரச்சினை செய்துகொண்டே இருந்தார், அதனால் தான் அப்படி செய்தேன். அவர் சென்னை வந்ததும் எதுவும் செய்ய மாட்டார் என்று எனக்கு தெரியும் என்று கூறினார். அந்த பிரச்சினையை அவர் மிகவும் கூலாக கையாண்டவிதம் என்னை ஆச்சரியப்படுத்தியது’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.