close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, June 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அனைத்து பணிகளும் செய்யப்பட்டிருந்தது. ஜூன் 20ஆம் தேதி முதல் டிக்கெட்டுக்கள் முன்பதிவும் தொடங்கியது. ஆனால் ஒருசில பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ஏற்பட்டிருந்த அனைத்து பிரச்சனைகளும் பேசி சரிசெய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கனவே ஜூன் 28ஆம் தேதி யோகிபாபுவின் 'தர்மபிரபு, ஜோதிகாவின் 'ராட்சசி', லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்', ஜிவி உள்பட ஒருசில படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதால் கடைசி நேரத்தில் ஒருசில திரைப்படங்களில் ரிலீஸ் தள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன ராமாயண கதையான 'சிந்துபாத்' திரைப்படத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.