close
Choose your channels

பேசி பேசி சம்பாதித்த வீடு இது.. விஜய் டிவி பிரபலத்தின் கனவு இல்லம் புகைப்படங்கள்..!

Saturday, March 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி பிரபலம் சென்னையில் புதிய வீடு வாங்கியுள்ள நிலையில் பேசிப்பேசி வாங்கிய வீடு இது என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததோடு வீட்டின் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ உட்பட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ராஜ்மோகன். இவர் ’வேலையில்லா பட்டதாரி 2’, ‘நட்பே துணை’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் 2013 ஆம் ஆண்டு ’பாபா பிளாக் ஷீப்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் அந்த படம் சுமாரான வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜ்மோகன் ஒரு மிகச் சிறந்த பேச்சாளர் என்பதும் பல பட்டிமன்றங்களில் அவர் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் தற்போது தனது கனவு இல்லத்தை வாங்கியுள்ள நிலையில் இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தனது வீட்டிற்கு ’பகத்சிங் இல்லம்’ என்றும் பெயர் வைத்துள்ளார். இந்த பதிவில் ராஜ்மோகன் கூறி இருப்பதாவது:

சென்னையில் புது வீடு வாங்கி உள்ளோம். மூத்தவன் பெயரை தான் வைக்க வேண்டும் என்று இளையவன் தீரன் கட்டளையிட்டு விட்டான். எனவே வீட்டின் பெயர் பகத்சிங் இல்லம்.

தலைவாசல் தோரணமாய் தாய் தந்தை பாசம். பால்கனி வரும் பறவைகளுக்கும் குடும்பத்தாரின் நேசம். தலைமுறைகள் தாண்டியும் நம் பெருமை பேசும்.

பேசி பேசி சம்பாதித்த வீடு இது. இதன் உள்ளே அன்பாய் பேச மட்டுமே அனுமதி. நீங்களும் உங்கள் பரிசுகளை அனுப்பலாம். வாயார வாழ்த்தும் வார்த்தைகளை விட வேறு பரிசு இருக்க முடியுமா என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.