நிரஞ்சனி திருமணத்தில் குத்தாட்டம் போட்ட விஜய் டிவி பிரபலம்: வைரல் வீடியோ
பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களின் மூன்றாவது மகள் நிரஞ்சனி நேற்று இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே., இந்த திருமணத்தில் பெரும்பாலான திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி இயக்கிய ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் நிரஞ்சனிக்கு ஜோடியாக நடித்தவர் விஜய் டிவி ரக்சன். இவர் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு நண்பர்களுடன் குத்தாட்டம் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி மணக்கோலத்தில் இருக்கும் தேசிங்கு பெரியசாமி மற்றும் நிரஞ்சனி உடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தனது திருமண திருமண வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.