close
Choose your channels

விஜய் டிவி ரக்சனுக்கு இவ்வளவு பெரிய மகளா? பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்..!

Friday, January 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் ரக்சன் தனது மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து, ‘உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கும் ரக்சன் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அவருடைய ’மறக்குமா நெஞ்சம்’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ரக்சன், கிட்டத்தட்ட 3 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள நிலையில் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். குழந்தை பருவத்தில் இருந்து எடுக்கப்பட்ட மகளின் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார். மேலும் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு தனது மகள் தான் தனது வாழ்க்கையில் ஒரு குட்டி நண்பர் என்றும் கூறியுள்ளார்.

ரக்சன் மகளின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ’உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதையே எங்களால் நம்ப முடியவில்லை, இப்படி இருக்கும்போது உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா?’ என்று ஆச்சரியத்துடன் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.