close
Choose your channels

நாசர் குடும்பத்தினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்

Monday, July 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான நாசர் வீட்டுக்கு தளபதி விஜய் திடீர் விசிட் அடித்து நாசர் குடும்பத்தினர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நாசரின் மகன் பைசல் கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறிய பைசல் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து காணப்படுகிறார்.
இந்த நிலையில் தளபதி விஜய், நாசர் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்து பைசல் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் பைசலுடன் செல்பியும் எடுத்து கொண்டார்.
இந்த புகைப்படங்கள் நாசரின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளிவந்ததோடு, தனது மகனுடன் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டது குறித்து தனது மகிழ்ச்சியையும் நாசர் தெரிவித்துள்ளார்.
விஜய் மற்றும் நாசர் இணைந்து பிரியமுடன்`, தமிழன்`, வசீகரா`, சுக்ரன்`, `ஆதி`, தலைவா` உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.