குஷ்புவை அடுத்த பாஜகவில் இணைகிறாரா கமல்-ரஜினி பட நாயகி?
கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணையும் திரையுலக நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் கமல், ரஜினி உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்த நடித்தவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவியில் இருந்தவருமான குஷ்பு திடீரென பாஜகவில் இணைந்தது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கமல், ரஜினி பட நாயகி பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிரபல தமிழ் தெலுங்கு நடிகை விஜயசாந்தி தான் பாஜகவில் விரைவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது
கமல் நடித்த ’இந்திரன் சந்திரன்’ ரஜினிகாந்த் நடித்த ’மன்னன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து உள்ள விஜய்சாந்தி கடந்த பல வருடங்களாக அரசியலில் உள்ளார். முதலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்த விஜயசாந்தி, அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் எம்பி ஆகவும் இருந்த இவர் கடந்த சில மாதங்களாக கட்சியின் எந்த நடவடிக்கைகளும் பங்கேற்காமல் உள்ளார். இந்த நிலையில் விரைவில் விஜய்சாந்தி அமித்ஷாவை நேரில் சந்தித்து பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
ஒரு காலத்தில் தென் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஜயசாந்தி தற்போது பாஜகவில் இணைந்தால், தென்னிந்தியாவில் பாஜகவின் பலம் கூடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்