close
Choose your channels

மருத்துவ சிகிச்சைக்கு கூட பணமில்லை.. வறுமையில் தவிக்கும் விஜயகாந்த், விக்ரம், சூர்யா பட தயாரிப்பாளர்..!

Monday, March 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த், சூர்யா, விக்ரம் உள்பட பிரபல நடிகர்களின் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் தற்போது தனது மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் வறுமையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜயகாந்த் நடித்த ’கஜேந்திரா’ என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. இவர் தயாரித்த விக்ரம், சூர்யா நடித்த ’பிதாமகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் தயாரித்த ஒரு சில படங்களால் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக தற்போது அவர் வறுமையில் வாடுகிறார். மேலும் அவர் நீரிழிவு நோயால் தவித்து வருவதாகவும் அவருக்கு சிகிச்சைக்கு கூட பணம் இல்லை என்றும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவரது நண்பர்கள் அவரை ஒரு வீட்டில் தங்க வைத்து இருப்பதாகவும், அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க பெரும் தொகை தேவைப்படுவதால் திரையுலகினர் அவருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்த வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை நிலையை அறிந்து நடிகர் சூர்யா அவரது சிகிச்சைக்காக ரூபாய் 2 லட்சம் வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.