close
Choose your channels

ஹெச் வினோத் அடுத்த படத்தில் 'விக்ரம்' பட நடிகர் தான் ஹீரோவா?

Sunday, June 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஹெச் வினோத், அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ மற்றும் ’வலிமை’ ஆகிய படங்களை இயக்கியதை அடுத்து தற்போது ’ஏகே 61’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் புனேவில் நடைபெறும் என தெரிகிறது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஹெச். வினோத் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

’ஏகே 61’ படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கவிருக்கும் அடுத்த அதிரடி ஆக்ஷன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருந்ததாக விமர்சனங்கள் வெளியான நிலையில் முதன்முதலாக ஹெச்.வினோத் மற்றும் விஜய் சேதுபதி இணையும் கூட்டணியும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.