close
Choose your channels

'விக்ரம்' ஏஜெண்ட் டினாவுக்கு கிடைத்த மரியாதை: வைரல் புகைப்படம்

Tuesday, June 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதை கமலஹாசன் சமீபத்தில் உறுதி செய்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய மூவரின் அபாரமான நடிப்பு மட்டுமின்றி சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர் கூட ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கமல்ஹாசனின் மருமகளுக்கு பாதுகாப்பாகவும் வேலையாளாகவும் ஏஜென்ட் டினா என்ற கேரக்டரில் நடித்த வசந்தி என்பவர் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வசந்தி ’நினைவெல்லாம் நீயடா’ என்ற படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அந்த படத்தின் குழுவினர் முதல் நாள் படப்பிடிப்பின்போது வசந்திக்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்தனர். ’விக்ரம்’ படத்தில் மொத்தமே 10 நிமிட காட்சிகள் நடித்த ஒரு நடிகைக்கும் அடுத்த படத்தின் குழுவினர் மாலை மரியாதை செய்தது மிகப்பெரிய ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.