close
Choose your channels

கைக்குழந்தையுடன் விக்ரம் பட நாயகி! வைரல் புகைப்படங்கள்!

Friday, June 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

19 ஆண்டுகளுக்கு முன் விக்ரம் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த 2002ஆம் ஆண்டு பாரதிராஜா மகன் மனோஜ் நடித்த ’வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அனிதா. அதன் பிறகு அவர் விக்ரம் நடித்த ’சாமுராய்’ எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய ’சுக்ரன்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் தெலுங்கு கன்னடம் படங்களிலும் நடித்தார்

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அனிதாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அவர் ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்தார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் அனிதா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அனிதாவின் க்யூட் குழந்தைக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.