close
Choose your channels

அஜித்-விஜய்யை இணைக்க விக்ரம் முயற்சி

Wednesday, January 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உள்பட தமிழகத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கிய கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையிலும், அவர்கள் புத்துணர்ச்சியுடன் மீண்டும் எழுச்சி பெறவும் விக்ரம் 'ஸ்பிரிட் ஆப் சென்னை' என்ற வீடியோ பாடலை இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த வீடியோ பாடலில் சூர்யா, பிரபுதேவா, ஜெயம் ரவி, ஜீவா, பரத், வரலட்சுமி சரத்குமார், மற்றும் வெளிமாநில கலைஞர்கள் பங்கு பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ பாடலில் அஜித் மற்றும் விஜய்யை இணைக்க விக்ரம் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. விக்ரமின் இந்த முயற்சி சாத்தியமானால் 'ராஜாவின் பார்வையிலே' படத்திற்கு பின்னர் அஜித் மற்றும் விஜய் மீண்டும் ஒன்றுசேர்ந்து நடிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த பாடலில் கமல்ஹாசன் தோன்றவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' பட இயக்குனர் விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த வீடியோ பாடலுக்கு நடன இயக்குனராக ஸ்ரீதர் மாஸ்டர் பணிபுரிகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.