close
Choose your channels

41 வயது நடிகையுடன் நடிக வினய் டேட்டிங்கா? வைரல் புகைப்படங்கள்!

Tuesday, January 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா நடித்த ’கனெக்ட்’ சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் வினய், 41 வயது தமிழ் நடிகை ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் ’பொய்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல மலையாள படங்களிலும் தெலுங்கு தமிழ் படங்களிலும் நடித்தவர் நடிகை விமலா ராமன். இந்த நிலையில் அவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

அதில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த விமலா ராமன், நடிகர் வினய்யுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக 23. 1. 23 என்ற தினத்தில் தனது பிறந்த நாள் வருவதை அடுத்து இந்த பிறந்தநாள் தனக்கு ஒரு ஸ்பெஷல் பிறந்தநாள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ’மை ஃபேமிலி’ என்று அவர் குறிப்பிட்டுள்ள நிலையில் அதில் வினய்யும் இருப்பதால் வினய்யுடன் அவர் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் வினய் மற்றும் நடிகை விமலா ராமன் ஆகிய இருவரும் ’டேம் 999’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தார்கள் என்பதும் அதன் பிறகு சில வருடங்களாக இருவரும் ஒன்றாக பொது இடத்தில் சுற்றி வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.