close
Choose your channels

நடுக்கடலில் மனைவி அனுஷ்காவுடன் வெற்றியை கொண்டாடிய விராத் கோஹ்லி!

Tuesday, August 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றியை வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடுக்கடலில் சகவீரர்களான கே.எல்.ராகுல், ரவிசந்திரன் அஸ்வின், மயங்க் அகர்வால் மற்றும் மனைவி அனுஷ்கா சர்மா உடன் நடுக்கடலில் உற்சாகமாக எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் கேப்டன் விராத் கோலியுடன் மனைவி அனுஷ்கா சர்மாவும் சென்றுள்ளார் என்பதும் ஓய்வு நேரங்களில் இருவரும் அந்நாட்டின் இயற்கை எழில்மிக்க சுற்றுலா பகுதிகளுக்கு சென்று எடுக்கும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.