close
Choose your channels

கார்த்தி நழுவ விட்ட வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட விஷால்!

Saturday, May 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தி நடிக்க வேண்டிய திரைப்படம் ஒன்றில் தற்போது விஷால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஜெயம் ரவி நடித்த ’அடங்கமறு’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் தங்கவேல் தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்து கார்த்தியின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தார். கார்த்தி தற்போது ’பொன்னியின் செல்வன்’ உட்பட ஒரு சில படங்களில் பிசியாக இருப்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இந்த படத்தில் விஷாலை நடிக்க வைக்க முடிவு செய்து அவருக்காக திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து உள்ளார். இந்த படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ’ஆடுகளம்’ ’பொல்லாதவன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயற்றிய கதிரேசன் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’எனிமி’ திரைப்படத்திலும் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் ’துப்பறிவாளன் 2’ படத்திலும் விஷால் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே மேலும் அவர் சமீபத்தில் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.