close
Choose your channels

விஷாலின் 'கத்திச்சண்டை'யின் நாயகி

Thursday, April 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்து முடித்துள்ள 'மருது' மற்றும் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த 'மதகஜராஜா' ஆகிய இரண்டு படங்களும் மே மாதம் வெளிவரவுள்ள நிலையில் விஷால் அடுத்து சுராஜ் இயக்கத்தில் 'கத்திச்சண்டை' என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுராஜ் இயக்கிய 'படிக்காதவன்' படத்தில் தமன்னா ஏற்கனவே நடித்திருந்தபோதிலும் விஷாலுக்கு முதன்முறையாக ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வைகைப்புயல் வடிவேலு காமெடி நடிகராக களமிறங்குகிறார். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ஜி.மாரிமுத்துவும் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.