close
Choose your channels

விஷாலின் 'வீரமே வாகை சூடும்': ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதி செய்த படக்குழு!

Friday, January 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த படம் திட்டமிட்டபடி வெளிவருமா? என்று ஒரு சிலர் சமூக வலைதளங்களில் வதந்தியை கிளப்பினர்.

ஆனால் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் என ஏற்கனவே ’வீரமே வாகை சூடும்’ படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஜனவரி 26 ஆம் தேதி ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிகழ்ச்சியில் விஷால், டிம்பிள் ஹையாதி, யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

விஷால், டிம்பிள் ஹையாதி, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை து.பா சரவணன் என்பவர் இயக்கியுள்ளார் என்பதும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.