close
Choose your channels

'மருது' படக்குழுவினர்களின் ஆன்மீக தரிசனம்

Thursday, January 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த 'கதகளி' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'மருது' திரைப்படத்தின் படப்பிடிப்பு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இராஜபாளையம் அருகில் உள்ள பழம்பெரும் கோவிலான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் விஷால், சூரி, இயக்குனர் முத்தைய உள்பட படக்குழுவினர் அனைவரும் ஆன்மீத தரிசனம் செய்துள்ளனர். இதுகுறித்த தகவல் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

விஷால், ஸ்ரீதிவ்யா, ராதாரவி, சூரி, ஆர்.கே.சுரேஷ், உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அன்புச்செழியன் அவர்களின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தை 'கொம்பன்' பட இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.