close
Choose your channels

இன்னும் சில மணி நேரங்களில் 'மருது' ரிசல்ட்

Tuesday, May 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'மருது' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 'கொம்பன்' முத்தையா இயக்கியுள்ள இந்த படமும் கிராமத்து பாணி ஆக்ஷன் கதை என்பதால் இந்த படம் பெரும் எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு செல்லவுள்ளதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் இந்த படத்தின் சென்சார் ரிசல்ட் என்ன என்பது குறித்த செய்திகள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை விஷால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'மருது' என்ற டைட்டில் கேரக்டரில் விஷால் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக முதல்முறையாக 'சாந்தி' என்ற கேரக்டரில் ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். மேலும் ராதாரவி, சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் இந்த படத்தில் சப்போர்ட்டிங் கேரக்டர்களாக நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.