close
Choose your channels

750 ஏக்கரில் உள்ள இந்திய ராணுவ தளத்தில் கமல்ஹாசன்

Saturday, September 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை ஒருபக்கம் தனது டுவிட்டரில் மூலம் தெரிவித்து கொண்டிருந்தாலும், 'சபாஷ் நாயுடு' மற்றும் 'விஸ்வரூபம் 2' படங்களின் பணிகளையும் கவனித்து வருகிறார்

சமீபத்தில் 'விஸ்வரூபம் 2' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று சென்னையில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான 750 பரப்பளவு உள்ள 'ஆபிசர்ஸ் டிரெனிங் அகாடமி' என்ற இடத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'விஸ்வரூபம் 2' படத்தின் ஆக்சன் காட்சிகள் படமாக்கி வருவதாகவும் கமல்ஹாசன் உள்பட இந்த படத்தின் படக்குழுவினர் இந்த படப்பிடிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மிக விரைவில் 'விஸ்வரூபம் 2' படம் குறித்த டீசர், டிரைலர், பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து இயக்கி வரும் இந்த படம் வரும் இவ்வாண்டு இறுதியில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.