close
Choose your channels

'இந்தியன் 2' படப்பிடிப்பில் விவேக் கொண்டாடிய பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரல் வீடியோ

Monday, April 19, 2021 • தமிழ் Comments

சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் தனது பிறந்தநாளை ‘இந்தியன் 2’ படப்பிடிப்ப்பின்போது கொண்டாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ரஜினி, விஜய், அஜீத் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் விவேக் நடித்திருந்தாலும் கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை என்ற ஏக்கம் அவருக்கு நீண்ட நாட்களாக இருந்தது. அந்த கனவு ’இந்தியன் 2’ படத்தின் மூலம் நிறைவேறியது. ’இந்தியன் 2’ படத்தில் அவருக்கு ஒரு முக்கிய கேரக்டரை ஷங்கர் கொடுத்திருந்தார். இது குறித்து கமல்ஹாசன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டிருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி ’இந்தியன் 2’ படப்பிடிப்பின் போது நடிகர் விவேக் தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இயக்குனர் ஷங்கர், பாபிசிம்ஹ உள்பட படக்குழுவினர் பலர் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz