close
Choose your channels

சிம்புவின் 50வது படத்தை இயக்கப்போவது இந்த பிரபலமா?

Tuesday, February 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த 47வது திரைப்படமான ’மாநாடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் 48வது திரைப்படமாக ’பத்து தல’ திரைப்படமும் 49வது திரைப்படமாக ‘கொரோனா குமார்’ என்ற திரைப்படமும் அமைய உள்ளது. இந்த நிலையில் சிம்புவின் 50வது திரைப்படத்தை இயக்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தை பிரபல இயக்குனர் ராம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ராம் தற்போது நிவின்பாலி, அஞ்சலி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்ததும் அவர் சிம்புவின் 50வது படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் சிம்புவை சந்தித்து ராம் கூறிய கதை சிம்புவுக்கும் பிடித்துவிட்டதாகவும் இதனை அடுத்து சிம்புவின் 50வது படமாக இந்த படம் உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.

எந்த நெருக்கடியும் இல்லாமல் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞன் ஒருவன் தன்னந்தனியாக சென்று வித்தியாசமான அனுபவங்களை பெறும் போது அவனது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை மையமாகக் கொண்டுதான் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் 50வது படமான ’சுறா’ சுமாரான வெற்றியைப் பெற்ற நிலையில் அஜித்தின் 50வது படமான ’மங்காத்தா’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் சிம்புவின் 50வது படத்தின் ரிசல்ட் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.