close
Choose your channels

பிக்பாஸ் டைட்டில் வின்னர்: ஆரிக்கும் பாலாஜிக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்!

Saturday, January 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆரிக்கு ஆரம்பம் முதலே மிகப்பெரிய ஆதரவு இருந்து வருகிறது என்பதும் சமூக வலைதளங்களில் அவரது பெயர் தினமும் ட்ரெண்டாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

ஆரியிடம் யாராவது சண்டை போட்டாலோ அல்லது கருத்துவேறுபாடுடன் மோதினாலோ, அந்த போட்டியாளர் அடுத்த வாரமே வெளியேற்றப்பட்டு வருவதில் இருந்தே ஆரிக்கு இருக்கும் ஆதரவாளர்களின் எண்ணிக்கை புரியவரும்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிவடையவுள்ள நிலையில் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த பல கருத்துகணிப்புகள் சமூக வலைதளங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் IndiaGlitz எடுத்த கருத்து கணிப்பில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக யார் வருவார்? என்ற கேள்விக்கு மக்கள் வாக்களித்துள்ள நிலையில் ஆரிக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக உள்ளது
இந்த கருத்துக் கணிப்பில் ஆரிக்கு மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது என்பதும் 1.24 லட்சம் பதிவான வாக்குகளில் அவருக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரியை அடுத்து பாலாஜிக்கு 11 சதவீதமும், ரியோவுக்கு 11 சதவீதமும், ரம்யாவுக்கு 5 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளது உள்ளது என்பதும், சோம், கேபி மற்றும் ஷிவானி ஆகியோர் ஃபைனலுக்கு தகுதி பெற்றாலும் அவர்களுக்கு தலா 3 சதவீதம் மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஆரி தான் சீசன் 4 டைட்டில் வின்னர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இரண்டாவது இடத்தை பிடிப்பவர் பாலாஜியா? அல்லது ரியோவோ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



கருத்துகணிப்பிற்கு இங்கே க்ளிக் செய்யவும்  

கடந்த 3 சீசன்களிலும் டைட்டில் வின்னர் யார் என்பதை கடைசிவரை கணிக்க முடியாத அளவில் இருந்த நிலையில் இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்பதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.