close
Choose your channels

நீங்க மட்டும் அவன் குறுக்க போயிடாதீங்க சார்....: யாஷின் 'கே.ஜி.எஃப் 2' மாஸ் பாடல்!

Monday, March 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சற்று முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற ’டூஃபான்’ என்ற பாடல் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

இந்த பாடலின் இடையிடையே சில வசனங்கள் வருகின்றன என்பதும் அதில் ’நீங்க மட்டும் அவன் குறுக்க போயிடாதீங்க சார்....: என்ற வசனம் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ், மாளவிகா அவினாஷ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். ரவி பஸ்ரூர் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்திய திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று டூஃபான் பாடல் வெளியாகியுள்ள நிலையில் தமிழில் வெளியாகிய பாடல் இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.