போற உயிரு அவனுங்க கிட்ட போராடியே போகட்டும் சார்.! யோகி பாபுவின் 'பொம்மை நாயகி' ட்ரைலர்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த 'பொம்மை நாயகி' என்ற படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கேலியும் கிண்டலுமான காமெடி நடிப்பில் பெயர் பெற்றவர் யோகி பாபு என்பதும் அவர் ஹீரோவாக நடித்தாலும் கூட அதிலும் காமெடிதான் உச்சகட்டமாக இருக்கும் என்பது தெரிந்ததே.
ஆனால் முழுக்க முழுக்க வித்தியாசமான, ஒரு சீரியஸான கேரக்டரில் ஒரு பாசத் தந்தையாக 'பொம்மை நாயகி' படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கின்றார் என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
தன் ஒரே செல்ல மகளின் மேல் உயிரையே வைத்திருக்கும் யோகி பாபு தனது மகள் காணாமல் போனவுடன் நிலைகுலைந்து போகிறார். அவர் தனது மகளை தேடி போகும் பயணத்தில் மகளை கண்டுபிடித்தாரா? என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது.
யோகி பாபு, ஹரிகிருஷ்ணன், அன்பு துரை, சுபத்ரா, ஸ்ரீமதி, யகுமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ஷான் இயக்கியுள்ளார். கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையில் உருவான இந்த படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.