close
Choose your channels

அவங்களே ஹீரோயின் மாதிரி அழகா தான் இருக்காங்க: இளம் நடிகையின் அம்மா புகைப்படம் வைரல்!

Thursday, June 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் வெற்றி படத்தில் நடித்த இளம் நடிகையின் அம்மாவின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த நடிகையின் அம்மாவே ஹீரோயின் மாதிரி தான் இருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவான ’பேச்சிலர்’ என்ற திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தில் அவருடைய நடிப்புக்கு கிடைத்த நல்ல பெயரை அடுத்து தற்போது இது ஒரு சில தமிழ் படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் திவ்யபாரதி அவ்வப்போது தனது பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தனது அம்மாவின் பிறந்த நாளை அடுத்து அம்மாவுடன் எடுத்த புகைப்படங்களை திவ்யபாரதி இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வரும் நிலையில் திவ்யபாரதியின் அம்மாவே ஹீரோயின் போல அழகாக தான் இருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.