close
Choose your channels

விவேகம்: அஜித்தை முந்திய கருணாகரன்

Thursday, June 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங் பணி தொடங்கிவிட்டது என்று வெளிவந்த செய்தியினை பார்த்தோம். இந்த நிலையில் அஜித் பகுதியின் டப்பிங் இன்னும் தொடங்கவில்லை என்றும் கருணாகரன் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

'விவேகம்' படத்தின் நாயகிகளான காஜல் அகர்வால், அக்சராஹாசன் மற்றும் துணை நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் முடிந்த பின்னர் கடைசியாக அஜித் டப்பிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.