close
Choose your channels

அஜித்-விஜய் படங்களை கண்டிப்பாக இயக்குவேன். வெற்றிவேல் நாயகன்

Friday, April 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார் நடிப்பில் வசந்தமணி இயக்கியுள்ள ''வெற்றிவேல்' திரைப்படம் இன்று வெளியாகி நல்ல ரிசல்ட்டுக்கள் வர தொடங்கியுள்ள நிலையில் விரைவில் அஜித் மற்றும் விஜய்யை இயக்குவேன் என்று சசிகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய்க்காக தேர்வு செய்து வைக்கப்பட்ட கதையை இயக்க தற்போது வாய்ப்பு கிடைக்கவில்லை எனினும் கண்டிப்பாக எனக்கு ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக சசிகுமார் கூறினார்.


மேலும் தனக்கு அஜித் மற்றும் விஜய் படங்களை இயக்க மிகவும் ஆசை என்றும் இந்த ஆசை காலமும் நேரமும் சேர்ந்து வரும்போது நனவாகும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

வெற்றிவேல்' திரைப்படம் தனது முந்தைய படங்களான 'சுந்தரபாண்டியன்', நாடோடிகள் படங்களை ரசித்தவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்றும் சசிகுமார் மேலும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.