close
Choose your channels

அனிருத்தின் முதல் திகில் பட சிங்கிள் ரிலீஸ் தேதி

Friday, April 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பீப் பாடல் பிரச்சனையில் இருந்து வெளியே வந்த பின்னர் அனிருத் இசையமைக்க ஒப்புக்கொண்ட படம் 'ரம்' என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கு இசையமைக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருந்த அனிருத் இன்று மாலை இந்த படத்தின் சிங்கிள் பாடல் டீசர் ஒன்றை வெளியிட உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளது.


தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் அவருடைய சகோதரராக நடித்த ரிஷிகேஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நரேன், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக் உள்பட பலர் நடிக்கின்றனர். சாய் பரத் இயக்கி வரும் இந்த படத்தை விஜயராகவேந்திரா தயாரிக்கின்றார்.

அனிருத் இசையமைக்கும் முதல் த்ரில் படம் இதுதான் என்ற நிலையில் இந்த படத்திற்காக அவர் கம்போஸ் செய்துள்ள பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோனி மியூசிக் நிறுவனம் இந்த படத்தின் பாடல்கள் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.