close
Choose your channels

விஷால்-பாண்டிராஜ் படத்தில் 'மெட்ராஸ்' நாயகி

Wednesday, July 1, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுசீந்திரன் இயக்கத்தில் 'பாயும் புலி' படத்தில் நடித்து வரும் விஷால், அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தற்போது உள்ளார். இந்நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

'பசங்க' பாண்டியராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ள விஷாலுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த தகவலை கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்தும் விஷால் தரப்பில் இருந்தும் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த புதிய படத்தின் நாயகி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு 'மெட்ராஸ்' நாயகி கேதரின் தெரசா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கேதரின் தெரசா தற்போது அதர்வாவுடன் 'கணிதன்', சிம்புவுடன் 'கான்' மற்றும் விஷ்ணுவுடன் 'வீர தீர சூரன்' ஆகிய படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால்-பாண்டிராஜ் இணையும் திரைப்படம் இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் முதல்கட்ட படப்பிடிப்பில் கேதரின் தெரசா கலந்து கொள்வார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சூர்யா, அமலாபால் நடித்துள்ள 'ஹைக்கூ' பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்ட பாண்டியராஜ், விஷாலை வைத்து இயக்கவுள்ள த்ரில்லர் படத்திற்கு தற்போது ஆயத்தமாகி வருகின்றார். இந்த படத்தை விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.