close
Choose your channels
கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் லண்டனில் காலமானார்.
Sunday, March 19, 2017 • தமிழ் Comments

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் காலமானார். அவருக்கு வயது 82.
 

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்த சந்திரஹாசன் கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி இருந்தார். இதனால் லண்டனில் உள்ள அவரது மகள் அனுஹாசன் வீட்டில் தங்கி சந்திரஹாசன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சற்றுமுன்னர் சந்திரஹாசன், மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். 

கடந்த ஜனவரி மாதம்தான் சந்திரஹாசனின் மனைவி கீதாமணி மறைந்தார். மனைவி கீதாமணி மறைந்த இரண்டு மாத இடைவெளியில் சந்திரஹாசனும் தற்போது காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News