close
Choose your channels

சிம்பு ரசிகர்களால் கதிகலங்க போகுதா காசி தியேட்டர்?

Wednesday, August 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பல்வேறு தடைகளை தாண்டி வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள 'வாலு' திரைப்படம் குறித்துதான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிவருகிறது. இந்நிலையில் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் 'வாலு' திரைப்படத்தை எந்த தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை காண விரும்புகின்றீகள் என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். இதற்கு பெரும்பாலான ரசிகர்கள் சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள காசி தியேட்டர் என்ற பதிலை அளித்துள்ளனர். எனவே வரும் 14ஆம் தேதி சென்னை காசி தியேட்டர் கதிகலங்க போவது உண்மை என தெரிகிறது.

சென்னை காசி தியேட்டரில்தால் பல திரையுலக பிரபலங்களும் தாங்கள் நடித்த படத்தின் முதல் நாள் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது என்பதை பார்க்க வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள 'வாலு' திரைப்படத்தை விஜய்சந்தர் இயக்கியுள்ளார். தமனின் இசையில் உருவான இந்த படத்தின் முன்பதிவு சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.