close
Choose your channels

முருகதாஸ்-மகேஷ்பாபு பட நாயகி குறித்த முக்கிய தகவல்

Thursday, April 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'துப்பாக்கி', 'கத்தி' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'அகிரா' படத்தின் ரிலீஸ் தேதி வரும் செப்டம்பர் 23 என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் முருகதாஸ் டீம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக பல பிரபல டோலிவுட், பாலிவுட் நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தீபிகா படுகோனே இந்த படத்தின் நாயகியாக நடிப்பார் என செய்திகள் வெளிவந்துள்ளது. மிகவிரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.
தீபிகா படுகோனே தற்போது xXx: The Return of Xander Cage என்ற ஹாலிவுட் படத்தில் Vin Diesel உடன் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.