close
Choose your channels

ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த தோனியின் காதலி

Tuesday, September 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுந்தர் சியின் கனவு திரைப்படமான 'சங்கமித்ரா' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் ரோலில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியதால் அவர் நடிக்க இருந்த கேரக்டருக்கு வேறு ஹீரோயின் தேர்வு நடைபெற்று வந்தது.

ஹன்சிகா உள்பட ஒருசில நடிகைகளுக்கு போட்டோஷூட் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 'சங்கமித்ரா' கேரக்டருக்கு நடிகை திஷா பதானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியின் காதலி பிரியங்கா கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சுந்தர் சி தற்போது 'கலகலப்பு 2' படத்தின் பணியில் இருப்பதால் 'சங்கமித்ரா' படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தூள்ளது. இந்த தகவலை சுந்தர் சியின் மனைவி குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.