close
Choose your channels

காயத்ரிக்கு விக்கிபீடியா வைத்த பெயர் என்ன தெரியுமா?

Saturday, July 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஒரு வாரம் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் வெறுக்கப்படும் ஒரு நபராக காயத்ரி உள்ளார். ஜூலியும் அவ்வப்போது வெறுப்பேற்றும் வகையில் நடந்து கொண்டாலும் அவருடைய நடவடிக்கைகள் சில சமயம் சிறுபிள்ளைத்தனமாகவும், மெச்சூரிட்டி இல்லாமல் இருப்பதாலும் மன்னிக்ககூடியதாக உள்ளது.
ஆனால் நயவஞ்சகத்தின் மொத்த உருவமாக இருக்கும் காயத்ரியை கமல்ஹாசனே கொஞ்சம் கடுமையான கண்டித்ததை பார்த்தோம். இந்த நிலையில் விக்கிபீடியா இணையதளத்தில் காயத்ரிக்கு சொர்ணக்கா என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நடித்த படங்களின் பட்டியலில் கடைசியாக பிக்பாஸ் என்று குறிப்பிட்டு அதில் சீனியர் சொர்ணக்காவாக காயத்ரி என்று குறிப்பிட்டு, ஜூலியை அவர் ஜூனியர் சொர்ணக்காவாக மாற்றி கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் மட்டுமின்றி விக்கிபீடியாவின் வெறுப்புக்கும் காயத்ரி ஆளாகியுள்ளதையே இது காட்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.