close
Choose your channels

இயக்குனர் அட்லிக்கு மெர்சலான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Thursday, September 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவரும் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றவரும் குறிப்பாக இயக்கிய மொத்தம் முன்று படங்களில் தளபதி விஜய் நடித்த இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றவருமான இயக்குனர் அட்லிக்கு IndiaGlitz சார்பில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்', தளபதி விஜய் நடித்த 'நண்பன்' ஆகிய படங்களில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லி இயக்கிய முதல்படமான 'ராஜா ராணி' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கோலிவுட்டின் வெற்றி இயக்குனர் பட்டியலில் இடம்பெற்றார்

'ராஜா ராணி' வெற்றி காரணமாக அட்லிக்க்கு கிடைக்க பரிசு 'தெறி'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தளபதி விஜய் நடித்த இந்த படமும் சூப்பர் ஹிட் ஆக, தற்போது மீண்டும் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தை இயக்கி வருகிறார். கண்டிப்பாக இந்த படத்தின் வெற்றி வாய்ப்பும் மிக அதிகமாக இருப்பதால் அட்லியின் வெற்றி தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை

இந்த நிலையில் அட்லி தயாரிப்பில் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படமும் திருப்தியான வசூலை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'மெர்சல்' வெற்றிக்கு பின்னர் அட்லி இன்னும் பல வெற்றி படங்களை இயக்கி பல விருதுகள் பெற இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் அவருக்கு எங்களின் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.