close
Choose your channels

ரோஜர்மூரை அடுத்து ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை மரணம்

Thursday, June 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர்மூர் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் காலமானார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ஜேம்ஸ்பாண்ட் சீன்கேனரி படத்தில் நடித்த பிரபல நடிகை மோலி பீட்டர்ஸ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75
சீன்கேனரி ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்த 'தண்டர்பால்' படத்தில் நர்ஸ் வேடத்தில் நடித்தவர் மோலி பீட்டர்ஸ். மேலும் 1965ஆம் ஆண்டிலேயே பிளேபாய் பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்தபோதும் அதன்பின்னர் ஒருசில படங்களில் மட்டுமே இவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மோலி பீட்டர்ஸ் அவர்களுக்கு ஏற்பட்ட சிறிய அளவிலான மாரடைப்பில் அவரது உயிர் பிரிந்தது. ஒருசில நாட்கள் இடைவெளியில் இரண்டு ஜேம்ஸ்பாண்ட் பட நட்சத்திரங்கள் உயிரிழந்தது ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.