close
Choose your channels

'விஜய் 59' படத்தில் எம்.ஜி.ஆர் பாடல்கள்?

Wednesday, August 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இந்த படத்தை வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக 'புலி' படக்குழுவினர் செய்து வருகின்றனர்.


இந்நிலையில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 59' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து கோவாவில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் முன்னேற்பாடுகளை கவனித்து வருகின்றனர். மேலும் 'விஜய் 59' படத்தின் விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் அவர் இந்த படத்தில் எம்.ஜி.ஆர் ரசிகராகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஹிட்டான பாடல்களின் ஒருசில வரிகளும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், ராதிகா, கே.எஸ்.ரவிகுமார், 'நான் கடவுள்' ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் நடிகை சுனைனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் 2016 பொங்கல் திருநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.