close
Choose your channels

ஜெய்-அஞ்சலியின் 'பலூன்' பறக்கப் போகும் தேதி அறிவிப்பு

Friday, August 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா போன்று கோலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி என்று கூறப்ப்படும் ஜெய்-அஞ்சலி நடித்த 'பலூன்' திரைப்படம் ரிலீசுக்கு ஏற்கனவே தயாராகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'பலூன்' திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்றும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்ய புதிய போஸ்டர் ஒன்றும் சற்றுமுன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின்னர் ஜெய்-அஞ்சலி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் ஜனனி ஐயர், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் சரவணன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சினிஷ் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.