close
Choose your channels

ஜெய்யின் 'புகழ்' சென்சார் தகவல்கள்

Wednesday, November 25, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம் நடிகரான ஜெய் நடிப்பில் கடைசியாக வெளியான வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ், மற்றும் வலியவன் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறாமல் இருந்தாலும் அவர் மிகவும் நம்பிக்கை வைத்துள்ள படம் 'புகழ்'.

வருண்மணியன் தயாரிப்பில் மணிமாறன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெய், சுரபி, கருணாஸ், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இயக்கியுள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இந்த படம் சென்சார் செய்யப்பட்டுவிட்டதால் விரைவில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.